இலங்கை துறைமுகங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!

இலங்கை துறைமுகங்களில் கிரேன் இயந்திரங்களை இயக்கும் பணிக்கு பெண்களை அதிகளவில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபை உட்பட அமைச்சின் கீழ் உள்ள ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி வினைதிறனாக பணியாற்றுமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கிரேன் இயந்திரங்களை இயக்கும் பணிகளில் பெண்கள் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றனர்

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தனது அமைச்சு சம்பந்தமான ஆலோசனை தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்தில் அமைச்சர் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உலகில் பல நாடுகளில் போன்று இலங்கை துறைமுகங்களிலும் கிரேன் இயந்திரங்களை இயக்கும் பணிகளில் ஏற்கனவே பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் இந்த பணிகளில் அதிகளவில் பெண்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள 2010 இலக்கம் 14 சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் வரும் உத்தரவுகளுக்கு ஆலோசனை தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி 2078/22 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட சிவில் விமான சேவை( ஊழியர்கள், பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது) உத்தரவுகளின் அச்சு பிழைகளை நீக்குவது இதன் நோக்கமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor