பிளாஸ்டிக் விற்பனை நிலையங்களில் சோதனை : 75% பிளாஸ்டிக் பொருட்கள் பொருத்தமற்றவை
சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது.
கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளில் உள்ள பல சில்லறை விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை கொள்வனவு செய்வதில் அவதானமாக இருக்குமாறு சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
வாங்கும் பல பிளாஸ்டிக் பொருட்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.
சந்தையில் உள்ள 75% பிளாஸ்டிக் பொருட்கள் அதற்குப் பொருத்தமற்றவை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.