கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 மற்றும் 13 வயது சிறுமிகள் உயிரிழப்பு – தாயும் தந்தையும் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100வது கிலோமீற்றரில் ஒரே குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் லொறியுடன் மோதியதில் பத்து வயது மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பின்னதுவ நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது.

மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த செனுதி தம்சரா என்ற சிறுமி மற்றும் மேலுமொரு சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுமிகளின் தாய், தந்தை படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறி மற்றும் அதே திசையில் பயணித்த கார், லொறியின் பின் வலது பக்கம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin