சம்பலும், குழம்பும் வழங்குவது நிறுத்தம்

சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலில் செய்யப்பட்ட குழம்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை நடத்துவோர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

ஒரு தேங்காயின் விலை சந்தையில் ரூ.200 வரை உயர்ந்துள்ளது.

அரிசி, முட்டை, உப்பு, தேங்காய் ஆகியவற்றின் விலை உயர்வினால் உணவுப் பொருட்களின் விலை 30 வீதத்தால் கன்டீன்களில் அதிகரிக்கப்படும் என திரு.ருக்ஷான் தெரிவித்தார்.

கோழி இறைச்சியின் விலை கிலோ ரூ.1,200ல் இருந்து ரூ.1,280 ஆக அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.
அதன்படி, அப்பம் மற்றும் மதிய உணவுப் பொதிகள் தயாரித்தல் ஆகியவையும் தேங்காய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin