மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்த வேண்டும் : எம்.ஏ. சுமந்திரன் !

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் கால தாமதமின்றி நடத்த வேண்டுமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த வருட இறுதி வரைக்கும் காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நிறைவடைந்தவுடன் மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக, மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானது என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லையென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு மூன்று வருடங்கள் வரை செல்லும். எனவே, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முறைமை தொடர்பில் தமது பரிந்துரைந்துகளை அனைவரும் முன்வைக்கலாம். இதுதொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது.

புதிய அரசியலமைப்பிலும் மாகாண சபை முறைமை தொடர்ந்தால், தற்போதிருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரங்கள் வழங்கப்படாதெனவும் தற்போதைய அதிகாரங்கள் குறைக்கப்படாதெனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin