விஷத்தன்மை உடைய திரிபோஷ பங்கு விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றையதினம் (21-09-2022) மறுத்துள்ளார்.
திரிபோஷா கையிருப்பில் அஃப்லாடாக்சின் என்ற நச்சுப்பொருள் இருப்பதாகவும் அது ஆதாரமற்றது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விநியோகிக்கப்பட்ட சில நச்சு திரிபோஷா வாபஸ் பெறப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மேற்கோள்காட்டி ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன (Rohini kumari kavirathna) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
விஷத்தன்மை உடைய திரிபோஷ கையிருப்புக்கள் என அழைக்கப்படும் பொருட்கள் மீளப் பெறப்படுவதாக தெரிவித்த PHI ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம் (Upul Rohana) விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், அதனை நிரூபிப்பதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறும் அமைச்சர் கோரியுள்ளார்.