நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியமையே விலை அதிகரிப்பிற்கு முக்கியமான காரணம் என வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, பச்சை மிளகாய் , தக்காளி கறி மிளகாய் என அனைத்து மரக்கரிகளும் இரண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
நேற்று நாரேஹேண்ட்பிட பொருளாதார மத்திய நிலையத்தில் போஞ்சி கிலோ ஒன்று 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.