மானிப்பாயில் பல்வேறு பிரச்சனைகள் – அசண்டையீனமாக செயற்படும் பிரதேச சபை செயலாளர்

மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றனர். இதனால் இவ் வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றது.

அத்துடன் அவ்வீதிக்கு அருகே வாழும் குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்ரிக், தகரப் பேணிகளில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அவ்வீதியில் உள்ள மின் விளக்குகளும் ஒளிர்வதில்லை. அதனை பிரதேச சபை திருத்தம் செய்வதும் இல்லை. இது பற்றி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சபேசனுக்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர் அதற்கு இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத காலத்தில் அவரது செயற்பாடுகள் விரும்பத் தக்கதாக இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin