தின்பண்டங்களின் விலையை குறைக்க தீர்மானம்!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலையை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 10 – 13 வீதத்தினால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தின்பண்டங்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தின்பண்டப் பொருட்களின் விலைகள் குறைவதை நுகர்வோர் காண்பார்கள் என சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார தெரிவித்துள்ளார்.

இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால், சந்தையில் தின்பண்டங்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

தின்பண்டங்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தாவர எண்ணெய்யின் விலை கிலோவிற்கு சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் அதிக விலைக்கு தின்பண்டங்களை கொள்வனவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor