தாமரை கோபுரத்தால் பாரிய அளவில் வருமானமீட்டும் இலங்கை!

கொழும்பு தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

அத்துடன் மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

04 நாட்களில் 11 மில்லியன் வருமானம்
கடந்த 15 ஆம் திகதி முதல் கட்ட தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட நிலையில் 04 நாட்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதனை பார்வையிட வந்திருந்தனர்.

இதன் மூலம் 11 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாமரை கோபுரத்தை பார்வையிட நேற்று (19) அதிகளவான மக்கள் வருகை தந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இன்று முதல் அதனை பார்வையிட வழங்கப்பட்டுள்ள நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor