பனிப் பொழிவினால் சூரிச் விமான நிலையத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
கடுமையான பனிப்பொழிவினால், நேற்று மதியம் முதல் சுவிஸ் வீதிகள் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் நேற்று மாலை சூரிச் விமான நிலையமும் பனிப் பொழிவினால் செயலிழக்கத் தொடங்கியது. இதனால், விமான போக்குவரத்து தற்காலிகமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது.
மாலை 6 மணிக்குப் பிறகு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது, எந்த விமானமும் புறப்பட முடியவில்லை.
இதனால் விமானங்களின் பயணங்களில் தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன, மேலும் சில விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசெலுக்கு அருகிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலும் பனிப்பொழிவினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல ஈஸிஜெட் விமானங்கள் ஜெனிவாவிற்கு திருப்பி விடப்படுகின்றன.
பனி காரணமாக ஒரு விமானம் தரையிறங்க முயன்று முடியாத நிலையில், திரும்பிச் சென்றுள்ளது.