இலங்கையில் அரச கடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியான புதிய அறிக்கை
இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் மாத நிறைவு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் தொகையானது 5720.7 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 17589.4 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது.
கடன் தொகை உயர்வு
இந்த தொகையானது ஏப்ரல் மாதமளவில் 23310.1 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க கடன் தொகையின் உள்நாட்டு கடன் தொகையின் அளவு 12442.3 பில்லியன் ரூபா.
இது 1345 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது. வெளிநாட்டுக் கடன் 4375.6 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.