மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமும் பாராட்டும் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு பண்டிகையை இரட்டிப்பு மடங்கு சந்தோஷத்தோடு கொண்டாடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். மன நிறைவான இந்த நாளில் குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். வீட்டில் பெண்களுக்கு அதிகமாக வேலை இருக்கும் பட்சத்தில் கணவன்மார்கள் உதவி செய்வது சந்தோஷத்தை மேலும் இரட்டிப்பாக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கான பண்டிகை நாள் இன்று சிறப்பாக செல்லும். இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக வேளையில் முன்கோபடக் கூடாது. பிள்ளைகளையும் உறவுகளையும் திட்டக்கூடாது. உடல் அசதியாக இருந்தால் கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்து வைத்து பின்பு வேலைகளை கவனிக்கவும். பொறுமையை இழக்கும் பட்சத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு பண்டிகைக்கான அனைத்து பொருட்களும் கிடைத்திருந்தாலும், அடுத்தவர்களை பார்க்கும்போது ஒரு சில பேருக்கு ஏக்கம் வரும். இதுபோல நம்மால் பண்டிகையை கொண்டாட முடியவில்லையே என்று. இருப்பதை வைத்துக் பண்டிகை கொண்டாடுவோம் மனநிறைவடைவோம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். நினைத்தது நல்லபடியாக நடக்கும். பண்டிகை வேலைகள் எல்லாம் சிறப்பாக முடியும். சில பெண்களுக்கு உடல் சோர்வு இருக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஜாக்கிரதையாக பட்டாசு வெடியுங்கள். பிள்ளைகளுடைய போக்கை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சிறு பிள்ளைகள் உங்கள் வீட்டில் இருந்தால் தனியாக அவர்களை பட்டாசு வெடிக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்கும். பண்டிகை சிறப்பாக கொண்டாடுவீர்கள். அடுத்தவர்களுக்கான உதவியும் செய்வீர்கள். பண்டிகை கொண்டாட முடியாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்து மன நிறைவு அடைவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். நீண்ட நாள் கடன் சுமை நீங்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாளாக இருக்கும். பண்டிகை திருநாள் சிறப்பாக செல்லும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள், ஒன்று கூடுவார்கள். நல்ல சாப்பாடு மன நிறைவான சந்தோஷமும் இந்த நாளை இனிமையாக்கி கொடுக்கும். ஜாக்கிரதையாக பட்டாசு வெடியுங்கள். பிள்ளைகளை கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் மேம்பாடு அடையக்கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு உடல் உபாதைகள் இருந்திருக்கும். எப்படி தீபாவளி கொண்டாட போகின்றோம் என்ற சந்தேகம் இருக்கும். அதெல்லாம் எதுவும் பிரச்சனையாக வந்து நிற்காது. இன்றைய நாள் இனிய நாளாக அமையும். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். பொறுமையாக அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை செய்யும். விருந்தாளிகளின் வருகை சுகசலவை ஏற்படுத்தும். தீபாவளி கொண்டாட்டங்கள் கலைக்கட்டும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நல்ல ஓய்வு கிடைக்கும். சில பேருக்கு மட்டும் வியாபாரத்தில் கொஞ்சம் வேலை இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பேராசைப்படக்கூடாது. குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் ஒரே நாளில் லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக, எந்த ஒரு குறுக்கு வழியையும் தேர்ந்தெடுக்காதிங்க. நேர்மையோடு நடந்து கொண்டாள் நல்லது. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தீபாவளி பண்டிகை சிறப்பாக செல்லும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். இந்த பண்டிகை நாளில் மனநிறைவோடு உங்களுடைய நாள் துவங்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். இறையருள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்வது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நிறைய அதிர்ஷ்டம் காரணமாக உங்களுக்கு நல்லது நடக்கும். பண வரவு உண்டாகும். பிள்ளைகளுக்கும் மனைவிகளுக்கும் தேவையான பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். சில பேருக்கு நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்புகள் இருக்கு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். பண்டிகை நாள் தான் இருந்தாலும் சின்ன சின்ன சண்டை சச்சரவு வர வாய்ப்பு உள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு வராது என்றாலும், சின்ன மன உளைச்சல் இருக்கும். அனுசரித்து செல்லுங்கள் கணவன் மனைவி வாக்குவாதம் செய்ய வேண்டாம். செலவை குறைப்பது இந்த மாத முழுவதற்கும் நல்லது.