பொதுத் தேர்தலில் இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் அறிவிக்கப்பட்ட செப்டெம்பர் 25 முதல் நேற்று ஒக்டோபர் 1 வரை, கொழும்பு மாவட்டத்தில் 3 சுயேச்சைக் குழுக்களும், களுத்துறை மாவட்டத்தில் 2, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தில் தலா 1, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4, வன்னி மாவட்டத்தில் 2, மட்டக்களப்பு மாவட்டத்தில் 7, திகாமடுல்ல மாவட்டத்தில் 4, திருகோணமலை மாவட்டத்தில் 3, அநுராதபுரம் மாவட்டத்தில் 2, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் தலா 1, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத்தில் தலா 2 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் இதுவரை 37 குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.