தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் இராஜினாமா!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒயிட்-போல் தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாம் இராஜினாமா செய்துள்ளார்.
தனது எதிர்கால கிரிக்கெட் நடவடிக்கையில் அதீத கவனம் செலுத்தவுள்ளமையினால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி முல்தானில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பாபர் ஆசாமின் இராஜினாமா வந்துள்ளது.
அந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.
சக வீரர் ஷான் மசூத் டெஸ்ட் அணியை வழிநடத்துவார்.
பாகிஸ்தான் அடுத்த மாதம் ஒயிட்-போல் தொடருக்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.
அங்கு பாபர் அசாம் அணியை வழிநடத்தவிருந்தார்.
எனினும், அவரின் அண்மைய முடிவினால் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) புதிய தலைவரை நியமிக்க வேண்டும்.
இந்த ஆண்டு மே மாதம் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு முதன் முதலில் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து 20 டெஸ்ட், 43 ஒருநாள் மற்றும் 85 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை பாபர் அசாம் வழிநடத்தியுள்ளார்.