விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-2 6-2 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அல்கராஸ வெற்றிகொண்டுள்ளார்.
இதன்மூலம் 21 வயதான கார்லோஸ் அல்கராஸ் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும், விம்பிள்டன் பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாத்த முதல் ஸ்பெயின் வீரர் என்ற சாதனையையும் கார்லோஸ் அல்கராஸ் பெற்றுள்ளார்.
அல்கராஸ் தற்போது பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் சாம்பியனாக உள்ளார், இந்த சகாப்தத்தில் இரண்டு போட்டிகளையும் வென்ற ஆறாவது நபர் பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.
விம்பிள்டன் பட்டம் வென்ற ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுக்கு விம்பிள்டன் கோப்பையை பிரித்தானிய – வேல்ஸ் இளவரசி கேட் வழங்கினார்.
இதேவேளை, இறுதிப் போட்டியைக் காண குறைந்த டிக்கட் 10,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.