துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான டொனால்ட் ட்ரம்ப் சிகிச்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் நியூஜெர்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
அவரது உடல் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு வலுப்பெறும் ஆதரவுகள்
ஜோ பைடன் கண்டனம்
டொனால்டு டிரம்ப் மீதான் துப்பாக்கி பிரயோகத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவரது எகஸ் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார் என்பதை அறிந்துக்கொண்டேன். அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பேரணியில் இருந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்.
அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. அதைக் கண்டிக்க ஒரே தேசமாக நாம் ஒன்றுபட வேண்டும்” என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.
எலோன் மஸ்க்
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை முழுமையாக ஆதரிப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் இரகசிய சேவையின் தலைவர் மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் காயமடைந்ததுடன் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொதுக்கூட்டத்திலிருந்த நபர் டிரம்ப்பை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது காயமடைந்த ட்ரம்ப் பலத்த பாதுகாப்புகளுடன் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மேலும் இருவர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில். முக்கிய கட்சிகளாக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் மோதவுள்ளன.
ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் களமிறங்கியுள்ளதுடன் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ள நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.