பிரான்சில் அரசியல் தஞ்சமடைந்த கஞ்சிபானி இம்ரான்: சிங்கள ஊடகம்

பிரபல பாதாள உலக தலைவன் கஞ்சிபானி இம்ரானுக்கு பிரான்சில் அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக “லங்காதீப” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையின் பாதாள உலக தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவது இதுவே முதல் முறை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் கஞ்சிபனியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கஞ்சிபானி இம்ரான் முன்னெடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு மாகந்துரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டவர்கள் துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது அவர்கள் சந்தேகத்தின் பேரில் இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், மாகந்துரே மதுஷ் தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எனினும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சிபானி இம்ரான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட காஞ்சிபனி, 2022ஆம் ஆண்டு மன்னாரில் இருந்து படகுமூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

அங்கிருந்து பிரான்சுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் பெற்றதாக குறித்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் காஞ்சிபனியின் மனைவி தற்போது துபாயில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

Recommended For You

About the Author: admin