சமூக சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய முழக்கத்துடன் ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஷுத் பெஷேஷ்கியன் முதல் சுற்றில் 42.5 வீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அரசியலமைப்பின் படி, வெற்றி பெறுவதற்கு 50 வீதமான வாக்குகளை விட அதிகமாக இருக்க வேண்டும்.
எனினும், மஷுத் பெஷேஷ்கியானால் அந்த வரம்பை கடக்க முடியாததால், இரண்டாம் கட்ட வாக்களிப்பு 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
வாக்கெடுப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள ஷாலிலி 38-6 வீத வாக்குகைளைப் பெற்றுள்ளார்.
இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பெஷேஷ்கியனை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 61 மில்லியனாக காணப்படும் நிலையில், இதில் 24.4 மில்லியன் முதல் சுற்றில் வாக்களித்துள்ளனர்.