அனுரவின் அடுத்த பாய்ச்சல்: கதிகலங்கியுள்ள ரணில், சஜித்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதானக் கட்சிகளும் வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரகடனத்தை தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேசிய பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்கும் திட்டங்களுடன் தமது தேர்தல் பிரகடனத்தை தேசிய மக்கள் சக்தி தயார்ப்படுத்தி வருகிறது.

பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜுலை முதல்வாரத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்க கட்சியின் தேர்தல் பிரகடனத்தை நாட்டு மக்களுக்கு வெளியிட தயாராகியுள்ளதுடன், தேர்தல் பிரசாரத்தையும் உத்தியோகப்பூர்வதாக ஆரம்பித்துவைக்க உள்ளார்.

இலங்கையின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 14ஆயிரம் தேர்தல் பிரசார பிரிவுகளை தேசிய மக்கள் சக்தி உருவாக்கி வருவதாகவும், அனுரவின் அறிவிப்பின் பின்னர் 24 மணித்தியாலமும் இந்த பிரிவுகள் இயங்கி மக்களிடம் தமது கொள்கைகளை கொண்டுசெல்ல உள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தவொரு கட்சியும் பின்பற்றாத தேர்தல் பிரசார வியூகங்களை தேசிய மக்கள் சக்தி வகுத்து செயல்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது.

தேசிய மக்கள் சக்தியின் இத்தகைய பாய்ச்சல்களை கண்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ள ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கதிகலங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin