இலங்கையில் மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் 2 மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 லட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளிநாடு சென்ற ஆளுநர் எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம்
எனினும் குறித்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக சுமார் 15 லட்சம் ரூபாவைப் பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மோசடி ஆளுநர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்பதுடன் மலையகத்தில் சில காலம் அரசியலில் ஈடுபட்டிருந்தார். சில காலம் அந்த மாகாணத்தின் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.