எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா சார்பில் இலங்கை வம்சாவளியான டியானா சுமனசேகர ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
அமெரிக்கக் கொடியின் கீழ் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த டியானா சுமனசேகர தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல தங்கப் பதக்கங்களை வென்றதால் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணிக்கு தேர்வு அவர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் அணி டியானா சுமனசேகரவை சோதனைக்கு தெரிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் நேற்று அறிவித்த்துள்ளது.
இதன்படி, டியானா உள்ளிட்ட அணியினர் மினசோட்டாவில் உள்ள மின்னியாபோலிஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் மையத்தில் கடந்த 27ஆம் திகதி முதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஃப்ரீமாண்டில் வசிக்கும் 16 வயதுடைய டியானா, அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் வழக்கமான உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.