சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கான பரிந்துரை ஏற்கனவே அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கூடும் போது இந்த கோரிக்கையை அரசியலமைப்பு பேரவை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பதவி நீடிப்பு செய்யப்படவில்லை என்றால் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஜூன் 27ஆம் திகதியுடன் ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய எதிர்வரும் டிசம்பர் மாதம் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையினால், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை ஆறு மாதங்கள் நீட்டித்து, பின்னர் அவரை பிரதம நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.