அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

மேல்,வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஏனைய மாகாணங்களை விட அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பல சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றுக்கான முறைப்பாடுகள் கிடைப்பது குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறுவர்களை புறக்கணிப்பது தொடர்பில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையில் 872 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதிக்குள், சிறுவர்களை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் 632 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களை அடிமைகளாக பயன்படுத்தியமை தொடர்பில் 50 முறைப்பாடுகள், சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாத குற்றச்சாட்டு தொடர்பில் 499 முறைப்பாடுகள் இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையில் கிடைக்கப்பெற்றுள்ளன.

Recommended For You

About the Author: admin