கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை எடுத்துச் செல்லும் பணியாளர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அவர் விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரை அச்சுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தமது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதற்காக பாதுகாவலர்களுடன் கடந்த 14 ஆம் திகதி அதிகாலை விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
தொடர்ந்து அவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த நிலையில், துப்பாக்கிகளுடன் பாதுகாவலர்களை அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலே, விமான நிலைய பாதுகாவலர்களுடன் முரண்பட்டதுடன், பொதுகளை எடுத்துச் சென்ற போர்ட்டர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் போர்ட்டர் அச்சம் காரணமாக பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தாம் கோபத்தில் இவ்வாறு நடந்துகொண்டதாக இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தெரிவித்துள்ளார்.