ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோரின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான விடயங்களை பரிசீலித்த கடுவல நீதமான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
மைத்திரி பதவி விலகியதன் பின்னர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு, கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்த்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையின் கீழுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச சூட்சுமமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது