“கோட்டாவை தப்பிக்க வைத்தது நான் தான்“: மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற நான் தான் உதவினேன்“ என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாக த மோர்னிங் என்ற ஆங்கிலச் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் நேர்காணல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், குறித்த செய்தியில்,

நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலயவின்போது இலங்கை ஜனாதிபதியொருவர் அடித்துக்கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ஆம் திகதி அவர் தப்பியோடுவதற்கு தான் உதவியதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வேறுபல நாடுகளை போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்சியை எதிர்கொண்டது இல்லை. உள்நாட்டு யுத்தத்தின்போது கூட இலங்கை தேர்தல்களை தவறவிட்டது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Oruvan

இலங்கை எப்போதும் தேர்தல் மூலமான அதிகார மாற்றத்தை கொண்டுவருவதற்கே முழுமையாக ஈடுபட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் ஒருபோதும் தாக்குதலுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டதாகவோ கைது செய்யப்பட்டதாகவோ வரலாறு இல்லை.

அப்படி ஒருவிடயம் நடந்துவிடக்கூடாது என எண்ணினேன். எனது ஜனாதிபதி காலத்தில் எதிர்கொண்டது போன்ற நிலைமை இலங்கையில் காணப்பட்டது.

தற்போது புதிய ஜனாதிபதியை ஏற்றுக்கொண்ட இலங்கை மக்கள், மீண்டும் அவர்களின் ஆட்சி அங்கு வர வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. காரணம் இன்றும் மறைமுகமாக அவர்களின் ஆட்சியே அங்கு நிலவுகின்றது.

2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் துப்பாக்கி குண்டுகளும் அங்கு இன்னும் காணப்படுவதையும் மறந்துவிடக்கூடாது.

நான் மாலைதீவின் எதிர்கொண்ட விடயங்களை கொழும்பில் இடம்பெற்றிருந்தால் தென்னாசியா முழுவதும் அது எதிரொலிப்பதாக அமையும்.

இலங்கை மக்களுக்கு மாற்று அரசியல் தேவைப்பட்டது. அதனை நான் புரிந்துக்கொண்டேன். அவர்களுக்கு உதவுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என நான் நம்பினேன்.

கோட்டபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு ஆசைப்படவில்லை. மாறாக அவர் இன்றும் திடகாத்திடமாகத்தான் இருக்கின்றார். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ்தான் படையினர் காணப்பட்டனர் என்பதையும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin