சுற்றுலா பயணிகளை மனநிறைவடையச் செய்யுமா இலங்கை?

இலங்கையில் சுற்றலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து இருந்த நிலையில், மார்ச் மாதத்திற்கு பின்னர் சடுதியாக பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வேறு இதர காரணங்களாலும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்தே காணப்பட்டது.

அந்த காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளால் நாட்டிற்கு கிடைக்கும் வருவாயும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால், அவற்றை ஈடுசெய்யும் முகமான 2023ஆம் ஆண்டு தொடக்கம் முதலே அதிக வருவாயை சுற்றுலா துறை மூலம் ஈட்டிக்கொள்ள முடிந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 225.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இது மொத்த வருவாயான 338.45 மில்லியனிலும் குறைவாகும். ஆனால், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 148.2 மில்லியன் அதிகரிப்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் அதிக சுற்றுலா பயணிகள் வந்துபோகும் மற்றும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அண்மையில் இலங்கை இடம்பிடித்திருந்தது.

சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் காரணமாக மக்கள் பயணிப்பதற்கு சிறந்த இடமாக இலங்கை பார்க்கப்படுகின்றது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு தாக்குதலை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நோய்தொற்று தீவிரமடைந்தது. தொடர்ந்து அரகலய போராட்டங்கள் நாட்டை பின்னடைவு பாதைக்கு கொண்டு செல்ல ஏதுவாக அமைந்தன.

நாட்டின் பொருளாதாரத்தை சுட்டிக்காட்டி பல இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினாலும், அதிகமான வெளிநாட்டு மக்கள் இலங்கை சிறந்த நாடு என வந்த வண்ணமே உள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் 22,000க்கும் அதிகமான சுற்றலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், எதிர்மறையான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாத நிலையில் இம்மாத இறுதிக்குள் 2000,000 சுற்றுலா பயணிகளை இலங்கை எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த 2024ஆம் ஆண்டில் சுமார் 2.4மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்துள்ளதுடன் 4.0 மெரிக்க டொலர்கள் வருவாயாக ஈட்டிக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin