பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் குழுவொன்று பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
க.பொ.த. சாதாரணதர பரீட்சை – பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தத்தடை
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களினால் இன்று (03) நடத்தப்படவிருந்த கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நாவல பல்கலைக்கழகம் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை நடத்தவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கல்விப் பொத்தராதர சாதாரணதரப் பரீட்சை நடைபெறுவதன் காரணமாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனுலா வித்தியாலயம், சமுத்திராதேவி மகளிர் கல்லூரி, சுஜாதா மகளிர் கல்லூரி, புனித ஜோசப் மகளிர் கல்லூரி ஆகியவற்றுக்கு அருகில் இவ்வாறு போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.