இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திறந்த கேள்விப்பத்திரங்களுக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் எந்தவொரு நாடும் விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, 20-25 நிறுவனங்கள் மாத்திரம் கேள்விப்பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவற்றில் மிகவும் பொருத்தமான 10 விண்ணப்பங்கள் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தரகு நிறுவனங்களின் எரிபொருள் இறக்குமதி
இருப்பினும் அவற்றில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எவையும் உள்வாங்கப்படவில்லை எனவும் அவை அனைத்தும் முகவர் நிறுவனங்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, முகவர் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.