2022ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்சார கட்டணங்கள் தாமதமாக செலுத்தியதன் காரணமாக சுமார் 30 மில்லியன் சிவப்பு பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த கஞ்சன விஜேசேகர,
“உரிய நேரத்தில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் 1.3 மில்லியன் நுகர்வோரின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 126,000 இற்கும் அதிகமான நுகர்வோரின் கணக்குகள் மூடக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 19 இலட்சம் புதிய மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன.
இலங்கையில் தற்போது 7.2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார பாவனையாளர்கள் உள்ளனர்.” எனவும் தெரிவித்தார்.