உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கியையும் அந்நாட்டு உயரதிகாரிகளையும் கொல்வதற்குச் சதி செய்ததாகக் கூறி, உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘ஏஎஃப்பி’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சதித் திட்டத்தில் ரஷ்யாவிற்குப் பங்கிருப்பதாக உக்ரேன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ரஷ்ய அரசுப் பாதுகாப்புத் துறை வகுத்த திட்டத்தைச் செயல்படுத்திய சந்தேகத்தின்பேரில், உக்ரைன் அரசுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அவ்விரு கர்னல்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உக்ரைனிய அரசுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
கடந்த 2022ஆம் ஆண்டில் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்னரே அவ்விரு கர்னல்களும் வேலையில் சேர்ந்ததாகக் கூறப்பட்டது.
அவ்விருவரும் ரஷ்ய அரசுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முகவர் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று உக்ரேன் தெரிவித்தது.
ஜனாதிபதி ஸெலன்ஸ்கியைக் கடத்திக் கொல்ல, அவருடைய பாதுகாவலர்களில் எவரேனும் முன்வருவார்களா என்று அவ்விரு கர்னல்களும் தேடி வந்ததாகச் சொல்லப்பட்டது.