நாட்டிற்கு அக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைக்கவில்லை எனின் 10 தொடக்கம் 12 மணித்தியால மின்வெட்டை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துனுவர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (11-09-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கூடிய விரைவில் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரிகளை கொண்டு வருமாறு கூறினோம்.
தற்போது இருப்பில் காணப்படும் நிலக்கரி தொகையானது எதிர்வரும் அக்டோபர் 20 – 25 ஆம் திகதி வரையிலேயே போதுமானது.
அதன் பின்னர் மின் உற்பத்தியை முன்னெடுப்பதற்கு கட்டாயமாக நிலக்கரிகள் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.