இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிபிசி, இலங்கை நிருபர் அசாம் அமீனின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை நியாயமற்றது என்று தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.
அதன்படி, இழப்பீடு வழங்கவும் பிபிசிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாய்மூலத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அடுத்த வாரம் முழு உத்தரவை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அஸாம் அமீன் கலந்துரையாடிய குரல் பதிவு ஒன்றை சிங்களே அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில் அப்போது அசாம் அமீன் 2020 ஆம் ஆண்டு பிபிசியில் இருந்து பதவி விலக்கப்பட்டிருந்தார்.
இதனால் ஒப்பந்தம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை நியாயமற்றது என்று அமீனின் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
இந்த வழக்கில் பிபிசி சார்பில் இலங்கையில் உள்ள அதன் சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.