அரசாங்கத்தின் கடன் வட்டி 26,300 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சின் சமீபத்திய புள்ளிவிபரங்களுக்கமைய, வங்கி வட்டி விகித உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், இந்த ஆண்டு அரசின் கடன் வட்டி செலவு அதிகரித்துள்ளது.
வட்டி வீதம் அதிகரிப்பு
திரைச்சேரி உண்டியல்களின் வட்டி வீதம் 30 வீதத்தை தாண்டியமையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
மேலும் ஒரு டொலருக்கான ரூபாவின் பெறுமதி 203 ரூபாயிலிருந்து 360 ரூபாயாக அதிகரித்தமையும் கடன் வட்டிச் செலவில் இவ்வளவு பெரிய தொகை அதிகரிப்பதற்குக் காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.