குமார தர்மசேனவுக்கு எதிராக முறைப்பாடு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேனவினால் நடத்தப்படும் பயிர்ச்செய்கை திட்டத்திற்கு மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இல்லை என ‘என்மூலம் நாட்டுக்கு அபிவிருத்தி’ என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த பயிர்ச்செய்கை திட்டத்தில் முதலீடு செய்வதற்காக மக்களிடம் இருந்து பண வைப்புகளை பெற்றுக்கொள்கின்றனர் என அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்த, இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிறுவனம் மக்களை தவறாக வழிநடத்தி பண வைப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும், மத்திய வங்கியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர் கோரியுள்ளார்.

‘அகர்வுட்’ எனப்படும் குமார தர்மசேனவினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

என்றாலும், இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றதென குமார தர்மசேன, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

”தமது நிறுவனத்தின் தயாரிப்புகள் நாட்டின் சட்டங்களின்படி மேற்கொள்ளப்படுகின்றன. சட்டவிரோத வர்த்தகம் எனக் கூறப்படும் ஊடகச் செய்திகள் சேறு பூசும் பிரச்சாரம். விவசாயம் சட்ட விதிகளின்படி நடத்தப்படுகிறது” என்றும் குமார தர்மசேன தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin