பிரித்தானியா விசா விதிகளில் திருத்தம்

பிரித்தானியா அரசாங்கம், வருமான வரம்புகளில் மாற்றம் உட்பட அதன் விசா விதிமுறைகளில் பாரிய திருத்தங்களை அறிவித்துள்ளது.

சட்டவிரோத இடப்பெயர்வுகள் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரஷி சுனக் தலைமையிலான அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்ப விசாவில் நாட்டிற்கு வரும் ஒருவருக்கு ஸ்பான்சர் செய்யத் தேவையான குறைந்தபட்ச வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருமான வரம்பு 18,600 பவுண்ட்ஸில் இருந்து 29,000 பவுண்ட்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 55 வீதத்திற்கும் மேற்பட்ட அதிகரிப்பாகும்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 38,700 பவுண்ட்ஸாக அதிகரிப்படுவதுடன், திறமையான தொழிலாளர் விசாவிற்கான சம்பளத் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் அதிகரிப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பிரித்தானியாவிற்கு வந்துள்ள நிலையில், இந்த திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய திருத்தங்களின் படி,

  • அனைத்து மாணவர்களின் திறனையும், பிரித்தானியாவை சார்ந்திருப்பவர்களை அழைத்துவரும் திறைனையும் முடிவுக்கு கொண்டுவருகின்றது.
  • பராமரிப்புப் பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவதைக் கட்டுப்படுத்தப்படுகின்றது.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்தால், பராமரிப்பு தர ஆணையத்தில் பதிவு செய்ய பராமரிப்பு வழங்குநர்களைக் கோரும்
  • துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும், இங்கிலாந்தின் ஒருமைப்பாடு மற்றும் தரத்தைப் பாதுகாக்கவும் சர்வதேச மாணவர்களுக்கான பட்டதாரி வழியை விரைவாக மதிப்பாய்வு செய்யவும் இடம்பெயர்வு ஆலோசனைக் குழுவை (MAC) நியமிப்பதுடன், அது பிரித்தானியாவின் நலன்களுக்காகச் செயற்படுவதை உறுதி செய்யும்.
  • திறமையான தொழிலாளர் விசாவில் வருபவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச சம்பளம் 26,200 பவுண்ட்ஸில் இருந்து 38,700 பவுண்ட்ஸாக அதிகரிப்பு
  • தொழிலாளர் பற்றாக்குறை நிலவும் தொழில்துறை பட்டியலை குடிவரவு திணைக்களத்திற்கு வழங்குவதுடன், அந்த துறையில் பணியாற்றும் பிரித்தானியர்கள் பெறும் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தை முதலாளிகள் வழங்க முடியாது.

பிரித்தானிய உள்துறைச் செயலர் ஜேம்ஸ் கிளவர்லியால் வழிநடத்தப்பட்ட குடியேற்றம் மாற்றியமைப்பின் ஒரு பகுதியாக இந்தப் பெரும் மாற்றங்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin