சோசலிச கம்யூனிஸவாதிகளின் ஏமாற்று வார்த்தைகள்?

தேசபற்று குறித்த கதைகளைக் கூறி சோசலிச கம்யூனிஸ தலைவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 150 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,

புத்தளம், ஆனமடுவ, கருவலகஸ்வெவ, சாலியவெவ மாதிரி கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ஆதங்கம் வெளிப்படுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச

“அவ்வாறானவர்களின் பிள்ளைகள் தனியார் பாடசாலை மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கையில்

நாட்டிலுள்ள ஏனைய பிள்ளைகள் சர்வதேச கல்விக்கான ஆணையை இழக்கின்றனர். ஆகவே போலி சோசலிசவாதிகளின் பொய்க் கதைகளுக்கு ஏமாந்து விடாதீர்கள்.

எமக்கு ஆட்சிக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி,

நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நிதியை மீள பெற நடவடிக்கை எடுப்போம்.காலாவதியான கல்வி முறைக்கு பதிலாக நவீன கல்வி முறை நாட்டுக்கு தேவை.

நாடு என்ற ரீதியில் சர்வதேச ரீதியில் போட்டியிடக்கூடிய கல்விமுறையை உருவாக்கி, நாட்டிற்கு பெருமை சேர்ப்பதுடன், மதிப்பு அதிகரிக்கும் வகையிலும் உலகை கையாள்வது அவசியம்” என அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin