ஜனாதிபதித் தேர்தலில் சஜித் போட்டியிட கூடாது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது.

அதற்காக ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், இந்த உயர்பீட சிரேஷ்டர்கள் குழு ஐ.தே.கவுடன் ரகசிய பேச்சுகளையும் நடத்தி வருகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சஜித் பிரேமதாச ஆதரவு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் கட்சியின் உயர்பீடத்துக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென பொதுஜன பெரமுன வலியுறுத்தி வருவதுடன், இன்று மாலை அக்கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்றையும் நடத்த உள்ளார்.

இந்த சந்திப்பில் பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் திட்டத்தை பசில் ராஜபகச், ரணிலிடம் கையளிக்க உள்ளதாக பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.

Recommended For You

About the Author: admin