பிரித்தானிய மகாராணி தொடர்பில் பலரும் அறியாத தகவல்கள்

இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்து வந்த இரண்டாம் எலிசபெத்(Elizabeth), தனது 96வது வயதில் உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் பதவி வகித்த ராணி என்ற பெயர் பெற்ற 2ஆம் எலிசபெத்தின்(Elizabeth) மறைவு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பட்டத்து இளவரசி:

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி(Elizabeth), 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி லண்டனில் பிறந்தார். பட்டத்து இளவரசராக இருந்த அவரது தந்தை 6ஆம் ஜார்ஜ், பிரிட்டனின் மன்னராக முடிசூடியதைத் தொடர்ந்து, 2ஆம் எலிசபெத் 1936ம் ஆண்டு முதல் பட்டத்து இளவரசியானார். அப்போது அவருக்கு வெறும் 10 வயது மட்டுமே. அப்போதிருந்து செல்வ செழிப்பான வாழ்க்கையை எலிசபெத்(Elizabeth) வாழத் தொடங்கிய நிலையில், ஆசிரியர்கள் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு கல்வி பெற்றார்.

8 வயதில் காதல்:

டென்மார்க்கின் இளவரசராக இருந்த தனது கணவர் பிலிப் கிரீஸை தனது 8ஆம் வயதில் சந்தித்த எலிசபெத்(Elizabeth), 13வது வயதில் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். இதையடுத்து இருவரும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கடிதங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

முதல் வானொலி ஒலிபரப்பு:

இதனிடையே 1939ல் 2ம் உலகப் போரின்போது எலிசபெத் (Elizabeth)தனது சகோதரியுடன் விண்ட்சர் கோட்டையில் தங்கினார். 1940ல் தனது முதல் வானொலி ஒலிபரப்பை பிபிசியின் சில்ட்ரன்ஸ் ஹவரில் எலிசபெத்(Elizabeth) வழங்கியதை அடுத்து, பிரிட்டிஷ் ராணுவத்தின் பெண்கள் பிரிவு சார்பில் ஒரு கவுரவ பதவியைப் பெற்றார்.

திருமணம்:

தொடர்ந்து 1947ல் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் 20ல் பிலிப் – எலிசபெத்(Elizabeth) திருமணம் நடைபெற்றது. சர்வதேச நிகழ்வான இத்திருமணத்தை உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பிபிசி மூலம் பார்த்தனர். இவரின் திருமணத்துக்காக 13 அடி நீளம் கொண்ட ஆடைக்கு, 10 ஆயிரம் முத்துக்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

குழந்தைகள்:

திருமணத்துக்குப்பின் ஒரு ஆண்டு கழித்து சார்லஸ் பிறந்தார். தொடர்ந்து ஆன், ஆண்ட்ரூ, எட்வர்டு ஆகிய மகன்கள் பிறந்தனர். இதைத்தொடர்ந்து 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ம் திகதி , தந்தை மறைந்ததும் இங்கிலாந்தின் ராணியாக முடிசூடிய இரண்டாம் எலிசபெத்(Elizabeth), 70 ஆண்டுகள் 214 நாட்கள் ராணியாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க 1961 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் அவர் இந்தியா வந்துள்ளார்.

2 பிறந்தநாள்:

ஆண்டுதோறும் இரண்டு பிறந்தநாள்களை அவர் கொண்டாடுவது வழக்கம். தான் பிறந்த ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், வானிலையைப் பொறுத்து ஒவ்வொரு ஜுன் மாத சனிக்கிழமையும் உத்தியோக ரீதியில் மற்றொரு பிறந்தநாளைக் கொண்டாடுவார். தன்னுடைய 6ஆம் வயதிலேயே வீட்டின் உரிமையாளரான அவருக்கு, ஆண்டுதோறும் 70 ஆயிரம் கடிதங்கள் வருவது வழக்கம்.

ஹேண்ட்பேக்:

பாஸ்போர்ட்டே இல்லாமல், அவரால் எல்லா நாடுகளுக்கும் சென்றுவர முடியும். பிரிட்டனில் வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்க அனுமதிக்கப்பட்டு வந்த ஒரே நபர் ராணி எலிசபெத்தான். அவர் ஒவ்வொரு முறையும் ஹேண்ட்பேக் எடுத்துச் செல்வதற்கும் காரணங்கள் கூறப்படுகிறது. வெளியே சென்ற அவர், பையை மேசை மீது வைத்தால் 5 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும் என அர்த்தமாம். அதுவே அதனை தரையில் வைத்தால் உரையாடவே விரும்பவில்லை எனப் பொருளாம்.

மறைவு:

70 ஆண்டுகளைத் தாண்டி இங்கிலாந்தின் ராணியாக அறியப்பட்ட எலிசபெத்,(Elizabeth) கடந்த ஆண்டு அவரின் கணவர் பிலிப் உயிரிழந்த நிலையில், கடந்த சில நாட்களில் அவரது உடல்நிலையும் மோசமானது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் ராணி உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

நீண்ட கால மகாராணி;

இங்கிலாந்து வரலாற்றில் நீண்ட கால மகாராணியாக அறியப்பட்ட 2ம் எலிசபெத், உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த 2வது நபர் என்ற பெருமையையும் பெற்றவர். உலகின் வல்லமைமிக்க பகுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேல் ராணியாக பதவி வகித்து, பல முக்கிய முடிவுகளை எடுத்த இவரின் ஆளுமையை உலகம் என்றென்றும் நினைவு கூறும்.

Recommended For You

About the Author: webeditor