நாட்டு வளங்களை விற்பது தேசிய குற்றம்: தேசிய பிக்குகள் அமைப்பு

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தேசிய குற்றம் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அணிந்திருக்கும் ஆடையை விற்றுவிட்டால் நிர்வாணம் முழு உலகுக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தேசிய பிக்குகள் அமைப்பு களனியில் ஏற்பாடு செய்திருந்த மஹா சங்க சம்மேளனத்தில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” எமது நாட்டின் மேலான கலாசாரத்தை பாதுகாத்துக் கொள்வதே எமக்கு முக்கியமாகும்.

ஆட்சியாளர்கள் எப்போதும் மக்கள் ஆணையின் நோக்கத்துடனே செயற்பட வேண்டும்.

காலத்துக்கு தேவையான மழை பெய்து விவசாயம் செழிப்புற்று நல்ல அறுவடையை பெற அரச பொறிமுறைகள் தர்மத்துடன் செயற்பட வேண்டும்.

நாட்டின் பெறுமதிமிக்க வளங்களை விற்பனை செய்து , அதனைச் செய்ய முடியாது.” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin