புரட்சியாளர்களின் பயங்கரவாதம் பலர் உயிர்களை பறித்தது: சஜித்

நாட்டில் புரட்சி செய்ய முயற்சித்து வருவதாக கூறும் புரட்சியாளர்களின் பயங்கரவாதம் காரணமாக பலர் உயிர்களை இழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

மொனராகலை,புத்தல லுணுகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கில் மாத்திரமல்லாது தெற்கிலும் பயங்கரவாதம் இருந்தது. நாட்டுக்குள் மீண்டும் அப்படியான ஒரு அவலம் நாட்டிற்குள் உருவாகி விடக்கூடாது.

நாடு 90 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாளியாக மாறியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம்.

அந்த அரசாங்கம் எடுத்த முட்டாள்தனமான முடிவுகளால் நாடு அழிந்தது. மீண்டும் அப்படியானதெரு நிலைமையேற்பட்டால்,நாட்டுக்கு நடக்க போவதை எண்ணிப்பார்க்க முடியாது.

அதேவேளை நாடு வங்குரோத்து அடைந்துள்ள சந்தர்ப்பத்தில் கல்விக்காக மேலதிக நிதியை ஒதுக்க முடியாது என அரசாங்கம் கூறினாலும் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக நிதியை தேடக்கூடிய பல வழிகள் இருக்கின்றன.

அவற்றின் மூலம் தரமான கல்வியை வழங்க முடியும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin