அனுரவின் திடீர் இந்திய பயணம்: வெளியானது புதிய கருத்துக் கணிப்பு

தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் விருப்பம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்ட ஜனவரி மாத கருத்துக் கணிப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு 40 வீத மக்களின் அங்கீகாரமும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 30 வீத மக்களின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 6 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 வீதமும் மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தேசிய மக்கள் சக்தியின் புகழ் ஒரு வீதத்தால் அதிகரித்துள்ள அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் புகழ் மூன்று வீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு 15,590 பேரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலானது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பிரபல்யமும் ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது.

அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் அவருக்கு மேலும் பிரபல்யத்தை தோடித்தந்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கையும் நாட்டில் அதிகரிக்கச் செய்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ujtrj

utru

Recommended For You

About the Author: admin