எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் முன்னிறுத்தப்பட்டால் அந்த சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்
இது தொடர்பில அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அந்த சவாலை நான் ஏற்றுக் கொள்வேன்.
நாட்டிற்காக ஒன்றிணைந்த நடவடிக்கையின் அடிப்படையில் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதே எனது நம்பிக்கையாகும்.
பொதுவான உடன்படிக்கைகள் மூலம் அரசியல் கூட்டணியை பேணுவதே நோக்கமாகும். அதன் கீழ் ஜனாதிபதித் தேர்தலும், வேட்பாளர் தெரிவும் இடம்பெறும்.
இம்முறையும் பொது நோக்கத்திற்காகவே எனது பங்களிப்பை வழங்குவேன். எந்தவொரு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளருக்கும் எனது ஆதரவு வழங்கவும் தயாராக இருக்கின்றேன்.
நாட்டின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்று என்னிடம் கூட்டாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அந்த சவாலை ஏற்கத் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.