இலங்கை குறித்து சர்வதேச நாணயநிதிய தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளும் இடையேயான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியமை குறித்து மகிழ்ச்சியடைவதாக, நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளனார்.

மேலும்,இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி உதவிக்கான உடன்படிக்கையை எட்டியுள்ளதாக கடந்த வியாழன்று மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐ.எம்.எப் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

அது தொடர்பிலேயே கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், இது இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: webeditor