ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழுப்பறி நிலை காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் திலங்க சுமதிபால இடையில் மோதல் நிலவி வருகிறது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கொன்றும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலைமை காரணமாக இரண்டு பேரும் பதவி விலகல் கடிதங்களை வழங்கி, பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இருவரிடமும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியை தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் சுதந்திரக்கட்சியின் அணியை சேர்ந்த எவருக்கும் வழங்க போவதில்லை என மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.