இலங்கை இராணுவத்தின் 20 வது தளபதி பதவி வகித்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டார். இதனையடுத்து தயா ரத்நாயக்கவை, ஐக்கிய மக்கள் சக்தியின் அரச கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக எதிர்க்கட்சி தலைவர் நியமித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கு கொண்ட இராணுவ அதிகாரிகளில் ஒருவரான தயா ரத்நாயக்க, 35 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்றியுள்ளார்.
1980 ஆம் ஆண்டு கெடேட் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்துக்கொண்ட அவர், இலங்கை இராணுவ கல்வியல் கல்லூரியில் அடிப்படை பயிற்சிகளை பெற்ற பின்னர், இலங்கை இராணுவத்தின் காலால் படைப்பிரிவின் இரண்டாம் லெப்டினட்டாக நியமனம் பெற்றார்.
போரில் காட்டிய திறமைகளுக்காக அவருக்கு வீ விக்ரம விபூஷன, ரண விக்ரம, ரணசூர, உத்தம சேவ ஆகிய பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.