அவுஸ்திரேலிய ஓபன்: ஜூனியர் பெண்கள் பிரிவில் சம்பியனான முதல்நிலை வீராங்கனை

அவுஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ரெனாட்டா ஜம்ரிச்சோவா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் 15 வயதான எமர்சன் ஜோன்ஸை 6-4 6-1 என்ற கணக்கில் அவர் தோற்கடித்து சம்பியன் ஆனார்.

16 வயதான ஸ்லோவாக்கியன் வீராங்கனையான ரெனாட்டா ஜம்ரிச்சோவா, கடந்த ஆண்டு மெல்போர்ன் அரங்கில் ஜூனியர்ஸ் இரட்டையர் பட்டத்தை வென்றார்.

மற்றும் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனின் ஜூனியர்ஸ் போட்டிகளின் அரையிறுதிக்கு முன்னேறியும் இருந்தார்.

இதேவேளை, ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், நான்காம் நிலை வீரரான ஜப்பானின் ரெய் சகாமோட்டோ (வயது 17)சம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில் அவர் 42 ஆம் நிலை வீரரான செக் குடியரசின் ஜான் கும்ஸ்டாட்டை 3-6, 7-6 (2), 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

Oruvan

Recommended For You

About the Author: admin