மருத்துவ சேவையில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முடிவு

நாட்டில் மருத்துவ சேவையின் எதிர்காலத்திற்காக அனைத்து மருத்துவ சங்கங்களும் இணைந்து புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்துள்ளன.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ நிறுவனம் உட்பட அனைத்து துறைகளின் வைத்தியர்களின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் இலவச சுகாதார சேவையை எதிர்காலத்தில், நாடு சுமையாக உணராத வகையில் இந்த நாட்டு மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கக்கூடிய ஒரு அமைப்பு பற்றி பேச வேண்டும்.

மக்களுக்கு அதிக சேவைகளை எவ்வாறு வழங்க முடியும்? மருந்துகளுக்கு செலவழிக்கும் பணத்திற்கு நியாயம் செய்வோம், குறைந்த செலவில் இந்தச் சேவையை வழங்குவோம். அதை எப்படிச் செய்வது என்று விவாதித்தோம்.

இந்த நாட்டில் இலவச சுகாதார சேவையை புதிய அத்தியாயத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தை எட்டினோம்.” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin