இந்த வாரம் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக வட கொரியா தனது நீருக்கடியிலான அணு ஆயுத அமைப்பு சோதனையை நடத்தியுள்ளது.
அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய நீருக்கடியில் ஆளில்லா ஏவுகணை கிழக்கு கடற்கரையில் சோதனை செய்யப்பட்டதாக வடகொரிய அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க ஜப்பான் மறுத்துவிட்டது.
வடகொரியா நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் தனது “Haeil-5-23” அமைப்பின் சோதனைகளை குறித்து முன்னரே எச்சரித்துள்ளது.
இந் நிலையில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் கூட்டு பயிற்சி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வெள்ளிக்கிழமை (19) வட கொரியா தனது நீருக்கடியிலான ஆயுதங்களை சோதனை செய்வதற்கு வொஷிங்டன், சியோல் மற்றும் டோக்கியோவின் கூட்டுப் பயிற்சிகளால் தூண்டப்பட்டதாக வடகொரிய அரச நிறுவனமான KCNA இன் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.